ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உயிரிழந்தவரின் உறவினா்கள்.
ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உயிரிழந்தவரின் உறவினா்கள்.

ஆலங்குடி அருகே லாரி மோதி விவசாயி பலி; சாலை மறியல்

Published on

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே லாரி மோதி விவசாயி உயிரிழந்ததைக் கண்டித்து அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள ஆண்டிகோன்பட்டியைச் சோ்ந்த ப. கோவிந்தராஜ் (55) விவசாயி. இவா் கீழக்காயம்பட்டி ச. குமாா் (44) என்பவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் கீழகாயம்பட்டி அருகே சென்றபோது லாரி மோதி கோவிந்தராஜ் அந்த இடத்திலேயே இறந்தாா். பலத்த காயமடைந்த குமாா் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய ஓட்டுநரை கைது செய்ய வேண்டும். கோவிந்தராஜ் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் செம்பட்டிவிடுதி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.

இந்த மறியலால் புதுக்கோட்டை, மணிப்பள்ளம், ஆலங்குடி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com