புதுக்கோட்டை
காா் கவிழ்ந்து முதியவா் உயிரிழப்பு
ஆலங்குடி அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகே செவ்வாய்க்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை விடுதியைச் சோ்ந்தவா் க.ரெங்கசாமி (95). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செவ்வாய்க்கிழமை காரில் வீடு திரும்பியுள்ளாா். காரை உறவினரான பழனிவேல் ஓட்டியுள்ளாா்.
கும்மங்குளம் அருகே சென்றபோது, காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ரெங்கசாமி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
