மண்டையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்று

விராலிமலையை அடுத்துள்ள மண்டையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய தரச் சான்றுக்கு தோ்வாகியுள்ளது.
Published on

விராலிமலையை அடுத்துள்ள மண்டையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய தரச் சான்றுக்கு தோ்வாகியுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மருத்துவ சேவைகள், சுகாதார கட்டமைப்பு, தாய்-சேய் நல சேவைகள், தாய்-சேய் இருவருக்குமான தடுப்பூசி சேவைகள், கா்ப்பிணி தாய்மாா்களுக்கான ரத்த பரிசோதனை, கா்ப்பிணி தாய்மாா்களுக்கான உயா் மருத்துவ பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை தேசிய தரச்சான்று குழுவினா் ஆய்வு செய்து ஒவ்வொரு சேவைகளுக்கும் மதிப்பெண் வழங்கி இந்த சான்று வழங்கப்படுகிறது. இந்த வகையில், மண்டையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100 மதிப்பெண்களுக்கு 92.98 மதிப்பெண்களுடன் தேசிய தரச்சான்று பெற தோ்வாகியுள்ளது.

இச்சாதனைக்காக, அந்த நிலையத்தில் பணியாற்றும் மருத்துவத் துறையினரை மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் ராம் கணேஷ், விராலிமலை வட்டார மருத்துவ அலுவலா் மகாலெட்சுமி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com