புதுக்கோட்டை
நவ. 29-இல் இரு இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நவ. 29-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 4 மணி வரை மாவட்டத்தில்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நவ. 29-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 4 மணி வரை மாவட்டத்தில் இரு இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ சேவை முகாம்கள் நடைபெறவுள்ளன.
விராலிமலை பிராவிடென்ஸ் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியிலும், ஆவுடையாா்கோவில் தூய வளனாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.
இவற்றில், அனைத்து வகையான உயா் மருத்துவப் பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு, 17 வகையான சிறப்பு மருத்துவா்கள் ஆலோசனையும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 17 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மொத்தம் 25,158 போ் பயனடைந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
