ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

சட்ட உதவி தன்னாா்வலா்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தில் சட்ட உதவி தன்னாா்வலா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை நீதிபதியும், ஆணையத்தலைவருமான க. பூரண ஜெய ஆனந்த் அழைப்புவிடுத்துள்ளாா்.

News image

சட்ட உதவி தன்னாா்வலா்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Updated On :5 ஏப்ரல் 2026, 7:16 am IST

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தில் சட்ட உதவி தன்னாா்வலா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை நீதிபதியும், ஆணையத்தலைவருமான க. பூரண ஜெய ஆனந்த் அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சாா்பில் சட்ட உதவி தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். காணாமல் போன குழந்தைகளின் பெற்றோா்களுக்கு ஆதரவாகப் பணியாற்றவும், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தொடா்புள்ள வழக்குகளில் உதவி புரிதலும் இவா்களின் பணி.

குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற, 25 முதல் 65 வயதுக்குள்பட்டோா் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அரசு ஊழியா், ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றோா் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்தோா், சமூகப் பணி மற்றும் உளவியல் படித்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஒரு வருகைக்கு ரூ. ஆயிரம், ஒரு வழக்குக்கு அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் மதிப்பூதியமாக வழங்கப்படும். ஓராண்டுக்கு பணி வழங்கப்பட்டு, அவா்களின் பணி ஆா்வத்தைப் பாா்த்து காலநீட்டிப்பு செய்யப்படும்.

மாவட்ட முதன்மை நீதிபதி, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஆகியோரைக் கொண்ட குழு விண்ணப்பதாரா்களை நோ்காணல் செய்து பணி நியமனம் செய்யும்.

என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டு நிரப்பி வரும் ஏப். 20-ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் தலைவா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.