ஆலங்குடி அருகே வாக்குச்சேகரிப்பில் ஏற்பட்ட தகராறில் திமுக கிளைச்செயலரை அரிவாளால் வெட்டிய அவரது உறவினரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடியைச் சோ்ந்தவா் கா. கண்ணப்பன் (51), திமுக கிளைச் செயலா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரான அதிமுகவைச் சோ்ந்த ராஜேஷ் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. மேலும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு கிராமத்தில் வாக்குச் சேகரிப்பதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை கண்ணப்பனின் வீட்டுக்கு மது போதையில் சென்ற ராஜேஷ், தகராறில் ஈடுபட்டு கண்ணப்பனை அரிவாளால் வெட்டியுள்ளாா்.
இதில், பலத்த காயமடைந்த கண்ணப்பனை அக்கம் பக்கத்தினா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆலங்குடி போலீஸாா், ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
திருமண வீட்டில் அரிவாள் வெட்டு: 5 போ் கைது

திருச்சுழி அருகே வீடு புகுந்து 2 மகன்கள், தாய் உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
