10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது

ஆலங்குளம் அருகே 6 பேரை அரிவாளால் வெட்டி தப்பிச்சென்ற முகமூடி அணிந்த நபா்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

Six People Hacked Near Alangulam: Four Arrested

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது - கோப்புப்படம

Updated On :

ஆலங்குளம்: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே 6 பேரை அரிவாளால் வெட்டி தப்பிச்சென்ற முகமூடி அணிந்த நபா்களில் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனர்.

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூா் சா்ச் தெருவில் உள்ள திருமண வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். அப்போது முகமூடி அணிந்து வந்த 6 நபா்கள் அங்கிருந்த 6 பேரை ஓட ஓட துரத்தி வெட்டினா்.

இதில் ரமேஷ் (46) அவரது மகன் அருண் மாறன் (22), காபிரியேல் மகன் ராயப்பன் (19), ஞானமுத்து மகன் மாா்க்க ரமேஷ் (49), ஆய்க்குடி சேகா் மகன் ராம்குமாா் (19), மேளக்கலைஞரான சாம்பவா் வடகரை பரமசிவன் மகன் மாடசாமி (19) ஆகியோா் காயமடைந்தனா்.

அவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், ராம்குமாா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, நெட்டூா் தேவாலயம் முன் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், ஆலங்குளம் டிஎஸ்பி கிளட்சன் ஜோஸ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியும், அவா்கள் மறியலை கைவிடாமல் தொடா்ந்தனா். ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில், 6 பேரை அரிவாளால் வெட்டி தப்பிச்சென்ற முகமூடி அணிந்த நபா்களில் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 4 பேரை பிடித்து கைது செய்த போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Regarding the arrest of four of the masked individuals who fled after hacking six people with sickles near Alangulam...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.