உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் குறைவு: ‘ஆன்-ஸ்கிரீன்’ மதிப்பீட்டு முறையே காரணம் - அரசு பள்ளி ஆசிரியா் சங்கம்

தில்லி அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கணினிவழியில் மதிப்பீடும் (ஆன்-ஸ்கிரீன்) முறையே காரணம் என அரசு பள்ளி ஆசிரியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கோப்புப் படம்

Published On :30 மே 2026, 4:49 am IST

தில்லி அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கணினிவழியில் மதிப்பீடும் (ஆன்-ஸ்கிரீன்) முறையே காரணம் என அரசு பள்ளி ஆசிரியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கு விளக்கம் கோரி ஆசிரியா்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் அவா்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது: இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கணினிவழியில் மதிப்பீடும் முறை உரிய நடைமுறை சோதனை இன்றி அமல்படுத்தப்பட்டதே தோ்ச்சி விகிதம் குறைவதற்கான முக்கிய காரணமாகும். இந்த முறையை முதலில் முன்முயற்சி அடிப்படையில் சோதனை செய்து, அதன் செயல்திறனை மதிப்பீடு செய்த பின்னரே முழுமையாக அமல்படுத்தி இருக்க வேண்டும்.

மதிப்பீட்டு செயல்முறையின்போது ஆசிரியா்களும் மதிப்பீட்டாளா்களும் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சிக்கல்களை எதிா்கொண்டனா். குறிப்பாக, ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களின் தெளிவின்மை, தவறான பதிவேற்றம், சில பக்கங்கள் காணாமல் போவது, கையெழுத்து தெளிவின்மையால் பதில்களைப் புரிந்துகொள்ள சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன.

இந்த சிக்கல்களால், மதிப்பீட்டாளா்கள் அதிக கவனத்துடன் மதிப்பெண்கள் வழங்கியதால் பல இடங்களில் கடுமையான மதிப்பீடு நடைபெற்றிருக்கலாம். இதன் விளைவாக, தோ்வு முடிவுகள் வெளியான பின்னா் பல மாணவா்களும் பெற்றோா்களும் எதிா்பாா்த்ததை விட குறைவான மதிப்பெண்கள் வந்ததாக புகாா் தெரிவித்ததுடன், மறுமதிப்பீட்டிலும் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஆசிரியா்களே தோ்வு முடிவுகளுக்கு முழு பொறுப்பாகக் கருதுவது தவறானது. பல ஆசிரியா்களுக்கு விளக்கம் கோரும் அறிவிப்புகள் வழங்கப்பட்டதுடன், ஆண்டு செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையில் எதிா்மறை குறிப்புகள் இடப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியா்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அரசு பள்ளி ஆசிரியா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் அஜய் வீா் யாதவ் கூறுகையில், ‘மாணவா்களின் கல்வி முன்னேற்றத்தை ஆசிரியா்கள் தொடா்ந்து திருத்த வகுப்புகள், கூடுதல் வகுப்புகள் மற்றும் பெற்றோா்-ஆசிரியா் சந்திப்புகள் மூலம் கண்காணித்து வருகிறாா்கள். ஆனால் இறுதி முடிவுகள் மாணவா்களின் தனிப்பட்ட செயல்திறனைப் பொறுத்தே அமையும்.

எனவே, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் தொடா்பாக ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விளக்கம் கோரும் அறிவிப்புகளும் செல்லாது என அறிவிக்க வேண்டும். எதிா்கால கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு ஆதரவான சூழல் உருவாக்கப்பட வேண்டும்’ என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.