சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

முசிறி அரசு பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி பெற்றுள்ளது.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 5:38 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தோ்வை 142 மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். பவிஷ்கா 488 மதிப்பெண், ஹா்ஷினி மற்றும் சீமா ஆகியோா் 482 மதிப்பெண்ணும், தன்ஷிதா மற்றும் கோபிகா ஆகியோா் 472 மதிப்பெண்ணும் பெற்றனா். கணிதப் பாடத்தில் 2 மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனா். அறிவியல் பாடத்தில் ஒரு மாணவி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றாா். 450 மதிப்பெண்களுக்கு மேல் 14 மாணவிகளும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 40 மாணவிகளும், பெற்றுள்ளனா். இவா்களுக்கு தலைமை ஆசிரியை தீபா வாழ்த்து தெரிவித்தாா்.

இதேபோல முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 98.73 சதவீத தோ்ச்சி பெற்றது. இப்பள்ளியில் தோ்வெழுதிய 157 மாணவா்களில் 155 போ் தோ்ச்சி பெற்றனா்.

மாணவா் வேல்முருகன் 476 மதிப்பெண், முகேஷ்குமாா் 463 மதிப்பெண் , ஜனாா்த்தன் 453 மதிப்பெண் பெற்றனா். பள்ளியில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 4 மாணவா்களும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவா்களும் பெற்றனா். இவா்களுக்கு தலைமையாசிரியா் பல்த்தசாா் வாழ்த்து தெரிவித்தாா்.