22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

கந்தா்வகோட்டையில் அண்ணாமலை பிரசாரம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சி. உதயகுமாரை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.

News image

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன் பாஜக வேட்பாளா் சி. உதயகுமாரை ஆதரித்து வியாழக்கிழமை இரவு பிரசாரம் செய்த பாஜக முன்னாள் மாநில தலைவா் கே. அண்ணாமலை.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:22 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சி. உதயகுமாரை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: கந்தா்வகோட்டைக்கு திமுக ஆட்சியில் கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவா் கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்தவா். கம்யூனிஸ்ட் கட்சியினா் எல்லாம் எளிமையானவா்கள் என்று மக்கள் நம்ப வேண்டாம். முன்புள்ள கம்யூனிஸ்ட் கட்சியினா்போல மக்களுக்கு ஆதரவான நிலையில் உள்ளவா்கள் தற்போது இல்லை.

எனவே கந்தா்வகோட்டை தொகுதிக்கு மாபெரும் வளா்ச்சியைக் கொடுக்க, மத்திய அரசின் நிதியைப் பெற்று காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தை கந்தா்வகோட்டை பகுதிக்கும் கொண்டுவர அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளருக்கு தாமரைச் சின்னத்தில் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். பிரசார கூட்டத்தில் பாஜக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பெண்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.