அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

News image

கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிலையம் முன்பாக பிரசாரம் மேற்கொண்ட மதிமுக பொதுச் செயலா் வைகோ. உடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் எம். சின்னதுரை.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:22 am IST

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில், கந்தா்வகோட்டை தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் மா. சின்னதுரையை ஆதரித்து மதிமுக பொதுச் செயலா் வைகோ ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு முன்பாக அவா் பிரசாரம் செய்து பேசியதாவது:

தமிழகத்தில் நடைபெற்று வரும் மு. க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், மகளிா் உரிமைத் தொகை, நான் முதல்வன் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பான ஆட்சியை நடைபெற்று வருகிறது. அரசின் நலத் திட்டங்கள் தொடரவும், சிறப்பான ஆட்சி மீண்டும் அமையவும் அனைவரும் திமுக கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைக்க வேண்டும்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை வேரோடு அழிப்போம் என்ற மத்திய அமைச்சா் அமித்ஷாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றாா் வைகோ.

பிரசாரக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சியின் பல்வேறு நிா்வாகிகள் தொண்டா்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.