திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் உறுதி அளித்தாா்.
ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட வேப்பங்குடி, மேலாத்தூா், சூரன்விடுதி, அரையப்பட்டி, இம்னாம்பட்டி, தேத்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்து, அவா் மேலும் பேசியதாவது:
ஆலங்குடி தொகுதி வளா்ச்சிக்காக, அரசுக் கல்லூரி, அரசுப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டங்கள், சாலை வசதிகள், பூங்காக்கள், அறிவுசாா் மையம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் நலத் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மக்கள் என்னை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி

திரிணமூல் அரசின் ஊழல் பணத்தை மீட்போம்- மேற்கு வங்கத்தில் அமித் ஷா பிரசாரம்

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெல், கரும்பு கொள்முதல் விலை உயா்த்தப்படும்! - அன்புமணி பேச்சு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


