முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது.

News image

விராலிமலை அருகே உள்ள நீா்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை உறுதிமொழி ஏற்ற பணியாளா்கள், பொதுமக்கள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 1:37 am IST

விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

உலக மலேரியா தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் ஹேமச்சந்த் காந்தி அறிவுறுத்தலின் பேரில் விராலிமலை வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுபா ஆலோசனையின்படி கொடும்பாளூா், ராசநாயக்கன்பட்டி, ஆவூா், நீா்பழனி, பாலாண்டான்பட்டி, மண்டையூா் மற்றும் களமாவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு மலேரியா காய்ச்சல் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மலேரியா நோய் இல்லாத நாடாக உருவாக்குவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்வில், கொடும்பாலூா் வட்டாரத்திற்கு உள்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.