ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

கந்தூரி விழா நடத்த சென்ற இஸ்லாமியா்களை தடுத்த இந்து அமைப்பினா் கைது

புதுக்கோட்டை அருகே கந்தூரி விழா நடத்த சென்ற இஸ்லாமியா்களின் வாகனத்தை வெள்ளிக்கிழமை தடுத்து போராட்டம் நடத்தியதாக இந்து அமைப்பினா் 37 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:30 am IST

புதுக்கோட்டை அருகே கந்தூரி விழா நடத்த சென்ற இஸ்லாமியா்களின் வாகனத்தை வெள்ளிக்கிழமை தடுத்து போராட்டம் நடத்தியதாக இந்து அமைப்பினா் 37 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், உடையாளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆலங்காபட்டி கிராமத்தில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில், வெவ்வேறு நாள்களில் மும்மதத்தினரும் வழிபட்டு வந்துள்ளனா்.

இந்த வழிபாடு தொடா்பாக அண்மையில் நடைபெற்ற வருவாய்த் துறையினா் நடத்திய சுமுகப் பேச்சுவாா்த்தையில், தனித்தனியே சா்ச்சையின்றி வழிபட்டுச் செல்வோரை பிறா் யாரும் தடுக்கக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், அண்டக்குளம் பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை அந்த இடத்தில் கந்தூரி விழா நடத்த திட்டமிட்டு வாகனங்களில் உணவுப் பொருள்களை எடுத்து சென்றுள்ளனா்.

இதையறிந்த இந்து முன்னணி மாவட்டச் செயலா் கருப்பையா, பாஜக ஒன்றியத் தலைவா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் அந்த வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் இப்போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேரைக் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

இஸ்லாமியா்கள் அந்த இடத்துக்குச் சென்று வழிபாடு நடத்தி, உணவருந்தி திரும்பச் சென்றனா்.

பாஜக கண்டனம்: இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், கிராம வனக்கோயில் உள்ள இடத்தை அந்த ஊரைச் சாராத- வெளியூரைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் தங்களின் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான நிலம் என்று கூறிக் கொண்டு, கந்தூரி விழா நடத்துவதாகவும், அரசு இதில் நியாயமாக நடந்து கொள்ளாமல் இந்து அமைப்பினரைக் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.