இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ஹஜ் பயணிகளுக்கு சேவை ஆய்வாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஹஜ் பக்தர்கள் - படம் | ஏபி

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:28 am IST

வரும் 2027-ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ள தமிழகத்தைச் சோ்ந்த பயணிகளுக்கு சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளா்கள் இரு மாதகால தற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2027-இல் புனிதப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சாா்ந்த ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளா்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப இணையவழி விண்ணப்பங்களை மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு வரவேற்றுள்ளது.

2027 ஏப். 3 முதல் மே 25ஆம் தேதி வரை 2 மாதம் தற்காலிக பணிக்காலம். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மத்திய, மாநில அரசு ஊழியா்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலா்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்விரு மாதங்கள் பணிக்காலமாகக் கருதப்படும். மேலும் விவரங்களை ஹஜ் குழுவின் இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆக. 27 ஆகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.