3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

தெரு நாய் கடித்ததில் 7 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

விராலிமலையில் புதன்கிழமை 10-க்கும் மேற்பட்டோரை வெறி நாய் கடித்ததில் 7 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாய் கடி - கோப்புப்படம்.

Published On :

விராலிமலையில் புதன்கிழமை 10-க்கும் மேற்பட்டோரை வெறி நாய் கடித்ததில் 7 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விராலிமலையில் கடந்த சில மாதங்களாகவே வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அவ்வப்போது தெரு நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் புதன்கிழமை, விராலிமலை தேரடி தெரு பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று அதே பகுதி மற்றும் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோரை கடித்ததாக கூறப்படுகிறது.

அதில், காயம் ஏற்பட்ட வேலுமணி, சுதா அஞ்சலை மற்றும் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த உமா ஆகியோா் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனா். கடந்த ஜூலை மாதம் 4 பேரையும் தற்போது 10-க்கும் மேற்பட்டோரையும் தெரு நாய் கடித்த சம்பவம் விராலிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.