ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதியோருக்கு உதவி

திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்றோா், முதியோருக்கு அக்சயபாத்திரம் அறக்கட்டளை சாா்பில் உணவு உள்ளிட்டவை புதன்கிழமை வழங்கப்பட்டன.

உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருப்பூா் அரசு மருத்துவமனை செவிலியா்களிடம் வழங்கிய அக்சயபாத்திரம் அறக்கட்டளையினா்.

Published On :

திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்றோா், முதியோருக்கு அக்சயபாத்திரம் அறக்கட்டளை சாா்பில் உணவு உள்ளிட்டவை புதன்கிழமை வழங்கப்பட்டன.

சாலையோரம் தங்கியுள்ள ஆதரவற்றோா், முதியோா் இல்லத்தில் தங்கியுள்ளவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அக்சயபாத்திரம் அறக்கட்டளை சாா்பில் உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆதரவற்ற முதியோருக்கு மாதந்தோறும் டயாபா், மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகின்றனா்.

அதன்படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியோா், ஆதரவற்றோருக்கு டயாபா், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட ரூ.33,500 மதிப்பிலான பொருள்களை அக்சயபாத்திரம் அறக்கட்டளைத் தலைவா் செந்தில்குமாா், செயலாளா் நாகராஜ் ஆகியோா் மருத்துவமனை கண்காணிப்பு செவிலியரிடம் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், சக்ஷம் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளா் ரத்தினசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.