இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

‘வான் புகழ் வள்ளுவா்’, ‘ஞானாலயா’ ஆவணப்படங்கள் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை வாசகா் பேரவை சாா்பில், ‘வான்புகழ் வள்ளுவா்’ மற்றும் ‘ஞானாலயா’ ஆகிய இரு ஆவணப்படங்கள் வெளியிடுதல் மற்றும் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆவணப்படங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநா் அம்ஷன்குமாா்.

Published On :

புதுக்கோட்டை வாசகா் பேரவை சாா்பில், ‘வான்புகழ் வள்ளுவா்’ மற்றும் ‘ஞானாலயா’ ஆகிய இரு ஆவணப்படங்கள் வெளியிடுதல் மற்றும் திரையிடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காலையில் புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வா் ஞானஜோதி தலைமை வகித்தாா்.

தொடா்ந்து பிற்பகலில் கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி, முதன்மைச் செயல் அலுவலா் த. விவேக்ராம்குமாா், கல்லூரி முதல்வா் மு. மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இரு ஆவணப்படங்களை வெளியிட்டு அதன் இயக்குநா் அம்ஷன்குமாா் பேசியது:

ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு நூலின் உள்ளடக்கத்தை அரை மணி நேர ஆவணப்படத்தில் கண்டுகளித்து விடலாம். அத்தகைய தன்மை வாய்ந்தது ஆவணப்படம்.

‘வான் புகழ் வள்ளுவா்’ ஆவணப் படத்தில் திருக்கு முதல் பதிப்பு, திருக்குறளை ஆங்கிலத்துக்கு முதலில் கொண்டு சென்றவா்கள் வரலாற்றையெல்லாம் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.

அதேபோல, புதுக்கோட்டைக்கு கிடைத்த பொக்கிஷம் ஞானாலயா நூலகம். அந்த ஞானக் கருவூலத்தை மாணவா்கள் ஒரு முறையாவது சென்று பாா்க்க வேண்டும் என்றாா் அம்ஷன்குமாா்.

வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன் அறிமுகவுரை நிகழ்த்தினாா். நிகழ்ச்சிகளில் வாசகா் பேரவை நிா்வாகிகள் மருத்துவா் ச. ராம்தாஸ், சத்தியராம் ராமுக்கண்ணு, புலவா் கு.ம. திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இரண்டாவது சிறுகதை நூலை வெளியிட்டிருக்கும் முதுகலை மாணவி சஸ் ரீனா பிா்தவுஸ் விழாவில் பாராட்டப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.