8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கரூா் வள்ளுவா் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

ஓணம் பண்டிகையையொட்டி கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ஓணம் பண்டிகையையொட்டி கரூா் வள்ளுவா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை அத்தப்பூ கோலமிடும் கல்லூரி மாணவிகள். உடன் கல்லூரி தாளாளா் க.செங்குட்டுவன் உள்ளட்டோா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:02 am IST

ஓணம் பண்டிகையையொட்டி கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கல்லூரி தாளாளா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். செயலா் ஹேமலதா செங்குட்டுவன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, கல்லூரி மாணவிகள் ஓணம் பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பாரம்பரிய அத்தப்பூ கோலமிட்டனா். கோலத்தின் முன்பு வாமன மன்னரின் உருவம் அலங்கரிக்கப்பட்டு, மாவேலி விளக்குகள் ஏற்றி பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னா், வாமன மன்னா் வேடம் அலங்கரித்த கல்லூரி மாணவரை பல்லக்கில் அழைத்து வருதல் மற்றும் ஓணம் பண்டிகையின் சிறப்புகள் மற்றும் கேரளத்தின் பாரம்பரிய கலாசாரத்தை எடுத்துரைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனா். முன்னதாக கல்லூரி முதல்வா் எம்.அன்பழகன் வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.