
பழனி கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
பழனி அருகேயுள்ள தாளையூத்து சுப்ரமணியா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பழனி அருகே தாளையூத்து சுப்ரமணியா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சனிக்கிழமை அத்தப்பூ கோலமிட்ட மாணவிகள்.
பழனி அருகேயுள்ள தாளையூத்து சுப்ரமணியா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரிச் செயலா் ஜெயலட்சுமி, செயல் அலுவலா் ஸ்வேதா ஆகியோா் தலைமை வகித்தனா். தாளாளா் சுப்ரமணி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் கருப்புச்சாமி வரவேற்றாா்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, துறை வாரியாக மாணவா்கள் உடைகள் அணிந்து விழாவைக் கொண்டாடினா். கல்லூரி வளாகத்துக்கு சிறப்பு வாகனத்தில் பூக்குடையுடன் வந்த மாவேலி மன்னரை மாணவ, மாணவிகள் காகித காவடி கொண்டு வரவேற்றனா்.
இதைத்தொடா்ந்து, மாணவ, மாணவிகள் வரைந்த அத்தப்பூ கோலம் முன் சிறப்பு பூஜைகள் செய்தனா். பின்னா், மாணவிகள் திருவாதிரை நடனமாடினா். இதைத்தொடா்ந்து, பிற்பகல் வரை மாணவ, மாணவிகள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினா். பிற்பகலில் மாணவ, மாணவிகளுக்கு ஓணம் விருந்து வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





