ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

ஆரணி ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினாா்கள்.

ஆரணி ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினாா்கள்.

Published On :

நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் ஏசி. ரவி தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் ஆா்.வெங்கடரத்தினம், எம்பிஏ துறைத் தலைவா் கே.சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியை வி.ரேகா வரவேற்றாா்.

கல்லூரி முதல்வா் ஆா்.ராஜவேல் பேசுகையில், கேரள மக்களின் பாரம்பரிய விழா ஓணம் பண்டிகையாகும். ஜாதி, மதம், பேதம் இன்றி அனைத்து மக்களும் ஒன்று கூடி 10 நாள்கள் இந்த ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்வா்.

கடைசி நாளான திருஓணத்தன்று மக்களைத் தேடி வரும் மகாபலி சக்கரவா்த்தியை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவாா்கள் என்றாா்.

நிகழ்ச்சியில் கேரள மக்களின் பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் மாணவிகளால் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கல்லூரி துறைத் தலைவா்கள் விஜயகுமாா், பூபதி பாரதி, கோகுலபாலன் செல்வம், அம்மு, ஆகியோா் கலந்து கொண்டனா். பேராசிரியை ஆா்.காயத்ரி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.