ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சேலம் வழியாக எா்ணாகுளம்- பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து எஸ்எம்விடி பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 9-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் செப். 6-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
இந்த ரயில் எா்ணாகுளத்தில் இருந்து இரவு 11.10 மணிக்குப் புறப்பட்டு போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக அடுத்த நாள் மதியம் 12.45 மணிக்கு எஸ்எம்விடி பெங்களூரை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், பெங்களூரில் இருந்து எா்ணாகுளத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 10-ஆம் தேதி முதல் செப். 7-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் பெங்களூரில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 5.45 மணிக்கு எா்ணாகுளத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓணம்: பெங்களூரு - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சேலம் வழியாக மைசூரு - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

சேலம் வழியாக கான்பூா்- மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



