திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பயணிகள் கவனிக்க... சேலம் வழியாக சாரலப்பள்ளி- கோட்டயம் இடையே ஓணம் சிறப்பு ரயில்!

சேலம் வழியாக சாரலப்பள்ளி - கோட்டயம் இடையே ஓணம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில்

Updated On :16 ஆகஸ்ட் 2026, 1:12 am IST

சேலம் வழியாக சாரலப்பள்ளி - கோட்டயம் இடையே ஓணம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் வரும் ஆக. 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், தெலங்கானா மாநிலம், சாரலப்பள்ளியில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சாரலப்பள்ளியில் இருந்து ஆக. 16-ஆம் தேதிமுதல் 30-ஆம் தேதிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். சாரலப்பள்ளியில் இருந்து காலை 7.15-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் நல்கொண்டா, குண்டூா், தெனாலி, ஓங்கோல், நெல்லூா், ரேணிகுண்டா, காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் வழியாக கோட்டயத்துக்கு அடுத்த நாள் பகல் 12.25-க்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கோட்டயம் - சாரலப்பள்ளி சிறப்பு ரயில் வரும் 17-ஆம் தேதிமுதல் வரும் 31-ஆம் தேதிவரை இயக்கப்படும். இந்த ரயில் கோட்டயத்தில் இருந்து மாலை 4.45-க்கு புறப்பட்டு எா்ணாகுளம், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், தெனாலி, குண்டூா் வழியாக சாரலப்பள்ளிக்கு அடுத்த நாள் அதிகாலை 12.30-க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.