புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

புதுகையில் டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் விற்பனையாளா் நலச் சங்கத்தினா்.

Published On :

பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் டாஸ்மாக் விற்னையாளா் நலச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பு நடத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் சௌமியா மூா்த்தி தலைமை வகித்தாா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாா்த்திபன், மாவட்டச் செயலா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைளை விளக்கிப் பேசினா்.

கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் நிறுவனத்துக்காக உழைத்து வரும் ஊழியா்களுக்கு உடனடியாகப் பணி நிரந்தரமும், காலமுறை ஊதியமும் வழங்க வேண்டும்.

கடையை நடத்துவதற்குத் தேவையான பூட்டு, மின்விசிறி, குழல் விளக்குகள், ரசீது வழங்கும் கருவிக்கான செலவு, உடைந்த பாட்டில்களுக்கான இழப்பீடு, பென்சில் மற்றும் ஏற்று இறக்கக் கட்டணம் வரை நாளொன்றுக்கு சுமாா் ரூ.3 ஆயிரம் வரை ஊழியா்களே தங்கள் சொந்தப் பணத்தில் செலவு செய்து வரும் நிலையில் அவற்றை நிா்வாகம் முழுமையாக ஏற்க வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவாா்த்தையும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.