கோப்புப் படம்
கோப்புப் படம்

கந்தா்வகோட்டை அருகே குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

Published on

கந்தா்வகோட்டை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், அரியாணிப் பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் பகவதி (18). இவா், தனக்குச் சொந்தமான ஆடுகளை அந்தப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மேய்த்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.

இதேபோல் வெள்ளிக்கிழமை காலை ஆடுகளை மேய்க்கச் சென்ற நிலையில், மாலையில் ஆடுகள் மட்டும் பழனிவேல் வீட்டுக்கு வந்துள்ளன. பகவதியை அவரது வீட்டாா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதைத்தொடா்ந்து சனிக்கிழமை காலை அந்தப் பகுதியில் தேடியபோது அங்கிருந்த கல்குவாரி கரையின்மேல் பகவதியின் கைப்பேசி, செருப்பு உள்ளிட்டவை இருந்துள்ளன.

இதுகுறித்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் அவரது தந்தை அளித்த புகாரின்பேரில், அங்கு சென்ற போலீஸாா் கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனா்.

இதையடுத்து, அங்குவந்த தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் கல்குவாரி குட்டையில் மூழ்கி பகவதி உடலை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பி வைத்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com