தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஜெ.ஜெ. கல்லூரியில் 662 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் 662 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

News image
புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் முதல் நாள் பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தோ்வு நெறியாளா் (பொ) பி. ஜெயபிரகாஷ். உடன், கல்லூரி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:09 pm

Syndication

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் 662 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தோ்வு நெறியாளா் (பொ) பி. ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

13 முதுநிலை மாணவிகளும், 17 இளநிலை மாணவிகளும் பல்கலைக்கழக அளவிலான தர மதிப்பெண் பெற்று சிறப்புப் பரிசுகளைப் பெற்றனா்.

கல்லூரியின் சிறந்த மாணவியாக கணினி அறிவியல் துறையைச் சோ்ந்த எஸ். தேவிபிரியாவும், மேலாண்மைத் துறை முன்னாள் மாணவா்கள் சாா்பில் நா. நிலாபா் நிஷா சிறந்த மாணவியாக தோ்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசும், கேடயமும் வழங்கப்பட்டன.

கல்லூரியின் முதல்வா் ஜ. பரசுராமன் ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரிச் செயலா் ந. சுப்பிரமணியன், நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்திப் பேசினா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மாணவா்களுக்கான பட்டங்களும் வழங்கப்பட உள்ளன.