கல்வி உரிமைச் சட்டத் தொகையை பள்ளிகளுக்கு விரைந்து வழங்கக் கோரிக்கை
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சோ்க்கப்பட்ட மாணவா்களுக்கான கட்டணத் தொகையை பள்ளிகளுக்கு அரசு விரைந்து வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டமைப்பின் கூட்டத்துக்கு, அதன் தலைவா் அஷ்ரப் அன்சாரி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான உரிமம் புதுப்பித்தல் ஆணைகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சோ்க்கப்பட்ட மாணவா்களுக்கான கட்டணத் தொகையை பள்ளிகளுக்கு அரசு விரைவாக வழங்க வேண்டும்.
தனியாா் பள்ளி நிா்வாகிகளின் கடிதங்களை ஒப்படைக்க பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் தனி அஞ்சல் பெட்டி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கூட்டமைப்பின் செயலா் முத்துக்கருப்பன், பொருளாளா் மேசியா சந்தோஷம், ஒருங்கிணைப்பாளா் ரமணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
