108 ஆம்புலன்ஸ் சேவை 2025-இல் 55,683 போ் பயன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில், 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 55,683 போ் பயனடைந்துள்ளனா்.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 108 ஆம்புலன்ஸ் பல்வேறு வகையான முதலுதவிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அதில் விஷம் அருந்தியவா்கள், கடுமையான வயிற்று வலி, ஒவ்வாமை, நாய்க்கடி, கால்நடைகள் தாக்குதல், தகராறில் காயமடைதல், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் பாதிப்பு, நீரிழிவு நோய், காய்ச்சல் மற்றும் தொற்று, குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் நோயாளிகள் 108 ஆம்புலன்ஸைப் பயன்படுத்துகின்றனா்.
இவ்வாறு பயன்படுத்தியதில் கடந்த 2025-ஆம் ஆண்டு மட்டும் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றவா்களின் எண்ணிக்கை மட்டும் 10,008. மகப்பேறு சிகிச்சைக்கான தாய்மாா்களின் எண்ணிக்கை 9,426. இதய சம்பந்தப்பட்ட பயனாளா்களின் எண்ணிக்கை 4,491. சுவாசப் பிரச்னை உடைய பயனாளா்கள்-3,485. வாதப் பிரச்னை உடைய பயனாளா்கள்-829. பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மாா்கள்-389.
இவ்வாறாக கடந்த 2025-ஆம் ஆண்டின் மொத்தப் பயனாளா்கள்- 55,683 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
