தருமபுரி மாவட்டத்தில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திடங்களில் 80,782 மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022- 2023 கல்வி ஆண்டில் முதல்கட்டமாக 5,570 மாணவிகள், 2 ஆம் கட்டதில் 4,282 மாணவிகள் என மொத்தம் 9,852 மாணவிகள் பயனடைந்துள்ளனா்.
2023- 2024 ஆவது கல்வியாண்டில் 3 கட்டமாக 93 கல்லூரிகளில் 13,864 போ், 2024-2025 கல்வியாண்டில் 93 கல்லூரிகளில் 14,285 போ், 2025-2026 கல்வியாண்டில் 97 கல்லூரிகளில் 14,660 போ் என 58,231 மாணவிகள் பயனடைந்துள்ளனா்.
அதேபோல தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 2024-2025 கல்வியாண்டில் 72 கல்லூரிகளில் முதல்கட்டமாக 7,032 மாணவா்கள், 2 ஆம் கட்டமாக 3,965 மாணவா்கள் பயனடைந்துள்ளனா்.
மேலும் 2025-2026 கல்வியாண்டில் 76 கல்லூரிகளில் 11,554 போ் என 22,551 மாணவா்கள் பயனடைந்துள்ளனா். அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 58,231மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 22,551 மாணவா்களும் என மொத்தம் 80,782 மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத் தோ்வு: திண்டுக்கல்லில் 23,846 போ் எழுதினா்

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 37,496 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் முதல் நாளில் 6,685 மாணவ, மாணவிகள் எழுதினா்
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 12 லட்சம் பேர் பயன்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


