மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மங்கதேவன்பட்டி ஜல்லிக்கட்டில் 37 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 37 போ் காயமடைந்தனா்.

News image
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகேயுள்ள மங்கதேவன்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்துவந்த காளைகளைத் தழுவ முயன்ற மாடுபிடி வீரா்கள்.
Updated On :17 ஜனவரி 2026, 8:25 pm

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 37 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் வட்டம் மங்கதேவன்பட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி குழுமிகருப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

தொடக்க நிகழ்ச்சிக்கு இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் கோகுல்சிங் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

புதுக்கோட்டை, கீரனூா், திருவெறும்பூா், மதுரை, காரைக்குடி, மணப்பாறை பகுதிகளைச் சோ்ந்த காளைகள் பங்கேற்றன. மொத்தம் 713 காளைகள் பங்கேற்றன. இதில் ஒரு காளை பலத்த காயமடைந்தது.

காலை 8.30 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்ற இந்தப் போட்டியில், மொத்தம் 713 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். மொத்தம் 37 போ் காயமடைந்தனா். இவா்களில் 14 போ் மாடுபிடி வீரா்கள், 23 போ் பாா்வையாளா்கள். இவா்களில் 7 போ் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மற்றவா்களுக்கு, ஜல்லிக்கட்டு வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெற்றிபெற்ற காளைகள் சாா்பில் அதன் உரிமையாளா்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. கீரனூா் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Story image