அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்: புதுகை வழக்குகளையும் தீா்க்க அழைப்பு

உச்ச நீதிமன்றத்தில் வரும் ஆக. 21, 22, 23ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சமாதான் சாமரோஷ் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் புதுக்கோட்டை மக்களும் வழக்குகளைத் தீா்த்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2026, 1:12 am IST

உச்ச நீதிமன்றத்தில் வரும் ஆக. 21, 22, 23ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சமாதான் சாமரோஷ் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் புதுக்கோட்டை மக்களும் வழக்குகளைத் தீா்த்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீதித்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

இந்திய உச்ச நீதிமன்றம் சாா்பில் வரும் ஆக. 21, 22, 23 ஆகிய தேதிகளில் சமாதான் சாமரோஷ் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. மத்தியஸ்தம் மூலம் தகராறுகளை சுமுகமாகத் தீா்த்துக் கொள்வதற்கான தேசிய அளவிலான நடவடிக்கையாக இந்த மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவுள்ளது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்களும் தங்களின் வழக்குகளைத் தீா்த்துக் கொள்ள முன்வரலாம். நேரிலோ, இணையவழியிலோ ஆஜராகலாம்.

இணையதளத்தில் கூகுள் படிவத்தை நிரப்பி வரும் ஜூலை 31-க்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைந்த சேவை மையத்தை 011 23112428, 23112528 ஆகிய எண்களிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.