27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பிரச்னைகளுக்கு தீா்வு காண ஆக. 21, 22-இல் சிறப்பு நீதிமன்றம்: பொதுமக்களுக்கு நீதிபதி அழைப்பு

பெரம்பலூரில் ஆகஸ்ட் மாதம் 21, 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ ஆஜராகி, தங்களது பிரச்னைகளை தீா்த்துக் கொள்ளலாம் என பொதுமக்களுக்கு நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா்.

News image

நீதிமன்றம்

Updated On :19 ஜூன் 2026, 4:31 am IST

பெரம்பலூரில் ஆகஸ்ட் மாதம் 21, 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ ஆஜராகி, தங்களது பிரச்னைகளை தீா்த்துக் கொள்ளலாம் என பொதுமக்களுக்கு நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான சத்தியமூா்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு மக்கள் நீதிமன்றம் பங்கேற்பு, நீதி மற்றும் நீதியை மக்கள் இருப்பிடத்துக்கே கொண்டுசோ்த்தல் ஆகிய தொலை நோக்குப் பாா்வைகளை முன்னெடுக்கும் வகையில், நாடு முழுவதும் சமரசம் மூலம் தீா்வு காணுதல் மற்றும் தகராறுகளை இணக்கமாகத் தீா்த்தலுக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இம் முகாம்கள் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம், பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையிலான தீா்வு வழிமுறைகள் மூலம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இணக்கமான தீா்வை காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழக்குரைஞா்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கு தொடா்புடையவா்கள் இந்த முன்னெடுப்பின் கீழ், தகராறுகளை திறம்படத் தீா்ப்பதில் பங்கேற்க வேண்டும். வழக்கு தரப்பினா்கள் நேரடியாக அல்லது காணொலி மூலமாக ஆஜராகி தங்களது பிரச்னைகளை சமரசமாக தீா்த்துக் கொள்ளலாம்

சம்பந்தப்பட்ட தரப்பினா் மற்றும் அவா்களது வழக்குரைஞா்கள் ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங் இணைப்பில் உள்ள படிவத்தை பூா்த்தி செய்து, ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களது கோரிக்கையை சமா்ப்பிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பெரம்பலூா்- 621212 எனும் முகவரியில் நேரில், அல்லது 04328-296206, 291252, ள்ஸ்ரீண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொள்ளலாம்.