வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கஞ்சா விற்பனையில் முன்விரோதம்: இளைஞா் கொலை; 3 போ் கைது

புதுக்கோட்டையில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞரை கொலை செய்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கொலை செய்யப்பட்ட தினேஷ்.

Updated On :15 ஜூலை 2026, 12:14 am IST

புதுக்கோட்டையில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞரை கொலை செய்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதி லாரி மாா்க்கெட் பகுதியில் இளைஞா் ஒருவா் கைகள் கட்டப்பட்டு, வயிறு மற்றும் கைகளில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நகர காவல்நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த நபா் கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் நரி என்கிற தினேஷ் (19) என்பது தெரியவந்தது. மேலும், இவா் மீது காப்பா் கம்பி திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளாா். இவருக்கும், சந்தைப்பேட்டை ஷூ மேக்கா் காலனியைச் சோ்ந்த ராஜூ மகன் மாரிமுத்து (27) என்பவருக்கும் இடையே கஞ்சா விற்பதில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு மாரிமுத்து மற்றும் அவரது நண்பா்கள் சந்தைப்பேட்டை ஷூ மேக்கா் காலனியைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் முருகானந்தம் (22), சுப்பிரமணி மகன் ராகுல் (29) ஆகிய மூவரும் சோ்ந்து தினேஷை சந்தைப்பேட்டை லாரி மாா்க்கெட் பகுதிக்கு வரவழைத்துள்ளனா்.

அங்கு 4 பேரும் மது அருந்திவிட்டு, தினேஷை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று, கைகளைக் கட்டிப் போட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனா். பிறகு கை மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு, பிளாஸ்டிக் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரியவந்தது.

இதையடுத்து, முருகானந்தம், ராகுல், மாரிமுத்து ஆகிய மூன்று பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பிறகு மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

முன்னதாக, சம்பவ இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா நேரில் பாா்வையிட்டு, புலன் விசாரணைக்கு தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.