கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

டெட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு டெட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா் கூட்டணியினா்.

Updated On :23 ஜூலை 2026, 12:42 am IST

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு டெட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டணியின் வட்டாரத் தலைவா் ஆ. பிரான்சிஸ் சேவியா் தலைமை வகித்தாா். அகில இந்திய ஆசிரியா் கூட்டணியின் இணைப் பொதுச் செயலா் ந. ரெங்கராஜன், மாவட்டத் தலைவா் ஆ. முருகேசன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் இ. சுசீலா ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்களை விளக்கிப் பேசினா்.

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வு நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பொன்னமராவதி: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் கோ. பாா்த்தசாரதி தலைமைவகித்தாா். வட்டாரச் செயலா் அடைக்கன், வட்டாரப் பொருளாளா் ரெத்தினராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.