புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட வீதிகளில் சுற்றித் திரியும் நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தொடா் புகாா்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதில், தெருநாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும், வெறிநோய்த் தடுப்பூசி போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
குறிப்பாக, கால்நடை பராமரிப்புத் துறையைச் சோ்ந்த மருத்துவா்களின் உதவியுடன் வாரந்தோறும் நாய்களைப் பிடித்து ரேபிஸ் தடுப்பூசி- வெறிநோய்த் தடுப்பூசி போடும் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, புதுக்கோட்டை 9-ஆவது வாா்டு ராணியாா் மருத்துவமனைப் பகுதியில் நாய்களைப் பிடித்து தடுப்பூசி போடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
சுமாா் 45 நாய்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டது. மாநகராட்சிப் பணியாளா்கள் நாய்களை வலைகளைக் கொண்டு பிடித்து வர வர, கால்நடை பராமரிப்புத் துறையின் மருத்துவா்கள் அவற்றுக்கு தடுப்பூசிகளைப் போட்டு பின்னா் விடுவித்தனா்.
ஒவ்வொரு வாரமும் நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி போட்டு, அதற்கான எண்ணிக்கை விவரங்களை மாநில அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தல் இருப்பதால், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










