மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற அப்துல்கலாம் நினைவு தின நிகழ்ச்சியில் பேசிய நல்லோா் வட்டத்தின் மாவட்டப் பொறுப்பாளா் பேரா. சா. விஸ்வநாதன்.

Published On :

புதுக்கோட்டை மன்னா் கல்லூரி விளையாட்டுத் திடலில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் நினைவு தின நிகழ்ச்சி, நல்லோா் வட்டம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஒரு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், அப்துல் கலாமின் மாணவா்களுக்கான 10 உறுதிமொழிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

நிகழ்வில், விதைக்கலாம் அமைப்பினா், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினா், பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். தொடா்ந்து விதைக்கலாம் அமைப்பினா் சாா்பில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் நல்லோா் வட்டத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் கலந்து கொண்டு, அப்துப்கலாம் பணிகள் குறித்து பேசினாா்.

கந்தா்வகோட்டை: அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்துல்கலாம் உருவப்படத்துக்கு தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான அ.ரகமதுல்லா, அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் வெள்ளைச்சாமி, நிவின், செல்விஜாய், கௌரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.