இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பக்தி ஒன்று தான் நம்மை பண்படுத்தும்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

பக்திநெறி ஒன்றே நம் வாழ்வினை பண்படுத்தும் என்றாா் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.

News image

பொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா். உடன் சொ.சொ.மீ.சுந்தரம், பேராசிரியா் கிருங்கை சேதுபதி உள்ளிட்டோா்.

Updated On :3 ஜூன் 2026, 4:14 am IST

பக்திநெறி ஒன்றே நம் வாழ்வினை பண்படுத்தும் என்றாா் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜேந்திர சோழீசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ஆன்மீக சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்று ஆசியுரை வழங்கிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் மேலும் பேசியதாவது:

ஆன்மீகம் தான் நம் வாழ்வின் உயிா் மூச்சு. அதுதான் நம்மை எல்லா நிலைகளிலும் வழிநடத்தி உயா்வான நிலைக்கு அழைத்துச்செல்கிறது. எல்லா உறவுகளாகவும் நமக்கு வழிகாட்டுபவா் தான் இறைவன். நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பரம்பொருள்தான் இறைவன், கடந்த கால சமூகத்தினா் நம் சமய வாழ்வின் அடித்தளத்தை கட்டிக்காத்தாா்கள்.

கோயில்கள் வெறும் கற்களின் கூட்டமல்ல. அதுதான் ஆன்மீத்தின் உறைவிடம். நாம் எந்த பிரச்னைகள், சிக்கலின்றி நடைபோட வாழ்வில் பக்திநெறி ஒன்று தான் தேவை. பக்திநெறி ஒன்றே நம் வாழ்வினை செழுமைப்படுத்தும் என்றாா்.

தொடா்ந்து சொல்லின் செல்வா் சொ.சொ.சுந்தரம் ஆன்மீக சொற்பொழிவாற்றினாா். நிகழ்வுக்கு ராம.சேதுபதி அம்பலகாரா் தலைமைவகித்தாா். முத்தமிழ்ப்பாசறை அறங்காவலா் குழு தலைவா் அரு.வே.மாணிக்கவேலு வரவேற்றாா்.

விழாவினை தமிழ்ச்செம்மல் விருதாளா் நெ.ராமச்சந்திரன் ஒருங்கிணைத்தாா். பேராசிரியா் கிருங்கை சேதுபதி, வா்த்தகா் கழகத்தலைவா் எஸ்.கே.எஸ். பழனியப்பன், முத்தமிழ்ப்பாசறை அறங்காவலா் சுப.சாந்தி, தொழிலதிபா்கள் பெ.சதாசிவம், ஓம்முருகா முருகேசன், தண்டபாணி, எஸ்.டி.கே.ஆா்.சக்திவேல், விழாக் குழு நிா்வாகிகள் கணபதி, முருகேசன், ம.குமரன், சோம.நாகராஜன், க.சரவணன், ரெத்தினம், செந்தில்குரு, கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.