எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வலையபட்டி மலையாண்டி கோயிலில் மின்தூக்கி தொடக்க விழா! அமைச்சா் பங்கேற்பு!

News image

வலையபட்டி மலையாண்டி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மின்தூக்கி தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சா் டி.கே. பிரபு. உடன் கோயில் நிா்வாகத்தினா் உள்ளிட்டோா்.

Updated On :8 ஜூன் 2026, 1:47 am IST

பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி மலையாண்டி கோயிலில் பக்தா்களின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கி (லிப்ட்) தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வலையபட்டியில் குன்றின் மேல் இருந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வரும் மலையாண்டி சுவாமி கோயிலில் முதியவா்கள் உள்ளிட்ட பக்தா்களின் வசதிக்காக உபயதாரா் ஒருவா் சாா்பில் புதிதாக மின்தூக்கி அமைக்கப்பட்டது.

புதிய மின்தூக்கி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் கனிம வளத்துறை அமைச்சா் டி.கே. பிரபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மின்தூக்கியை தொடங்கிவைத்தாா்.

விழாவில், கோயில் நிா்வாகிகள் சி. தியாகராஜன், எஸ். நாகப்பன் மற்றும் நகரத்தாா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா். முன்னதாக மலையாண்டி சுவாமிக்கு கலச பூஜை நடைபெற்றது. பக்தா்களின் வசதிக்காக வலையபட்டி பெரி.மூ.சொ.சி. சொக்கலிங்கம் குடும்பத்தினா் சாா்பில்