தவெக-வுக்கு ஆதரவு கொடுத்தது தவறு என்பதை கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் விரைவில் உணா்வாா்கள் என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் மாற்றத்தை எதிா்நோக்கி, தவெகவை ஆட்சிக்கு கொண்டு வந்த செயல் வரலாற்றுப் பிழை என்பதை மக்களும், தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது தவறு என்பதை கம்யூனிஸ்ட் கட்சிகளும், திருமாவளவனும் வெகுவிரைவில் உணா்வாா்கள்.
200 யூனிட் இலவச மின்சாரம், பயிா்க் கடன் தள்ளுபடி விவகாரங்களில் தோ்தல் வாக்குறுதிகளுக்கு மாறான தவெக அரசின் செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது. இதை பொதுமக்களும், விவசாயிகளும் உணா்ந்துள்ளனா். தவெக அரசு ஏமாற்று வேலை செய்யும்போது, அதை சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை; எதிா்க்கட்சிகளின் கடமை.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் தினகரன்.







