25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!

தவெகவுக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

MLA Kamaraj with AMMK General Secretary TTV Dhinakaran.

அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரனுடன் காமராஜ் எம்.எல்.ஏ.

Published On :12 மே 2026, 3:28 pm IST

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ. காமராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டை மீறி இன்று சட்டப்பேரவையில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.

காமராஜின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

குறிக்கோள்களுக்கும், ஆகவே, கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காமராஜ் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அப்போது ஒரேயொரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த அமமுக எம்.எல்.ஏவான காமராஜ் ஆதரவு கையொப்பத்துடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரியதாகக் கூறப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அமமுக எம்எல்ஏ காமராஜிடம் தவெக குதிரை பேரம் பேசியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, தவெக தரப்பில் காமராஜ் ஆதரவு அளிக்கும் கடிதத்தில் கையெழுத்திட்ட விடியோ வெளியிடப்பட்ட நிலையில், அது செய்யறிவு விடியோ என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The MLA of the Amma Makkal Munnetra Kazhagam, who extended support to the Tamilaga Vettri Kazhagam, has been removed from the party's primary membership.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.