ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

திருவப்பூா் கோயில் தேரோட்டம்: மாா்ச் 9-இல் உள்ளூா் விடுமுறை!

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி வரும் மாா்ச் 9-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை

News image

உள்ளூா் விடுமுறை - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 6:49 pm

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி வரும் மாா்ச் 9-ஆம் தேதி திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அன்றைய நாளுக்கு மாற்றாக மாா்ச் 14-ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலகங்கள் மட்டும் குறைந்தபட்ச பணியாளா் எண்ணிக்கையுடன் செயல்படும். அதேபோல, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள அரசுப் பொதுத்தோ்வுகள் அதன்படி நடைபெறும் என்றும் ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.