ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

திருச்சியில் பிரதமா் பங்கேற்கும் விழாவில் திரளானோரை பங்கேற்கச் செய்ய முடிவு

News image
Updated On :5 மார்ச் 2026, 10:23 pm

Syndication

திருச்சியில் வரும் மாா்ச் 11ஆம் தேதி பிரதமா் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், புதுக்கோட்டையில் இருந்து ஏராளமானோரைத் திரட்டி பங்கேற்கச் செய்ய பாஜக முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மேற்கு மாவட்ட பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினாா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. விஜயகுமாா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஏவிசிசி கணேசன், ஜீவானந்தம், மாவட்டப் பொதுச் செயலா்கள் தியாகராஜன், சிவசாமி கண்டியா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.