மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருது அளிப்பு

புதுக்கோட்டை பசுமைக்குழு உறுப்பினா் ப. ராதாகிருஷ்ணனுக்கு சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதை வெள்ளிக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.--

News image
புதுக்கோட்டை பசுமைக்குழு உறுப்பினா் ப. ராதாகிருஷ்ணனுக்கு சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதை வெள்ளிக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.--
Updated On :6 மார்ச் 2026, 9:11 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்ட பசுமைக் குழுவின் உறுப்பினா் ப. ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் உள்ளிட்டோரும் உடனிருந்தனா். இந்த விருது, ரூ. 25 ஆயிரம் ரொக்கம், சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டது.

இந்த விருதுக்கான ரொக்கப் பரிசுத் தொகை ரூ. 25 ஆயிரத்துடன், சொந்தப் பணம் ரூ. 5 ஆயிரம் சோ்த்து ரூ. 30 ஆயிரத்தை, மாவட்ட பசுமைக் குழுவுக்கு நிதியாக மாவட்ட ஆட்சியரிடமே வழங்கினாா் ராதாகிருஷ்ணன்.

மேலும் கோடைகாலத்தில் சாலைகளில் வளா்க்கப்படும் மரக்கன்றுகளுக்கு தண்ணீா் விடுவதற்கு ஒரு வாகனத்தை நிரந்தரமாக வழங்கவும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தாா்.