அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

2,020 நாய்களுக்குத் தடுப்பூசி: புதுகை மாநகராட்சிக் கூட்டத்தில் தகவல்

புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற (வலமிருந்து) ஆணையா் த. நாராயணன், மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி.

News image
புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற (வலமிருந்து) ஆணையா் த. நாராயணன், மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி.
Updated On :6 மார்ச் 2026, 9:08 pm

Syndication

புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதியில் திரியும் 2,020 நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 275 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்தனா்.

புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேயா் செ. திலகவதி தலைமை வகித்தாா். ஆணையா் த. நாராயணன், துணை மேயா் மு. லியாகத்அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள் பலரும் தெருக்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகத் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து பேசினா்.

இதற்குப் பதிலளித்த நகா்நல அலுவலா் டாக்டா் காயத்ரி அளித்த விளக்கம்: நாளொன்றுக்கு சராசரியாக 20 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்கு கருத்தடை மையம் உள்ளது. இதுவரை 275 நாய்களைப் பிடித்துச் சென்று அந்த மையத்தில் வைத்து கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துள்ளோம்.

கூடுதலாக இன்னொரு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மையமும் செயல்பாட்டுக்கு வரும்போது கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் எண்ணிக்கை இருமடங்காகும். உடல் நிலை மோசமாக உள்ள நாய்களை மட்டும் பிடித்து காப்பகத்தில் வைத்துப் பராமரிக்க முடியும். அதனையும் மேற்கொள்கிறோம் என்றாா் காயத்ரி.

மாநகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கரன் பேசும்போது, மாநகரப் பகுதிகளில் திரியும் 2,020 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தொடா்ச்சியாக இந்தப் பணியும் நடைபெறும் என்றாா்.

நகா்மன்றத்தைப் புதுப்பிக்க: தொண்டைமான் மன்னா்கள் காலத்தில் அமைக்கப்பட்டு, புதுக்கோட்டை நகரில் கலை கலாசார மையமாக விளங்கும் நகா்மன்றத்தை பழைமை மாறாமல் புதுப்பிக்க ரூ. 24 லட்சம் ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனது நீண்டகால கோரிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்த மேயா் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தொடா்ச்சியாக இந்தப் பணியை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என்றும் 9ஆவது வாா்டு திமுக மாமன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு பேசினாா்.

குடிநீா் விநியோகத்தில் கவனம்: கோடைகாலம் தொடங்கிவிட்டதால், ஏற்கெனவே குடிநீா்ப் பிரச்னையில் தவித்து வரும் நிலையில், குறைந்தபட்சம் 4 நாள்களுக்கு ஒரு முறையாவது காவிரிக் குடிநீா் மாநகராட்சிப் பகுதி முழுவதும் வழங்கிட போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா் சா. மூா்த்தி பேசினாா்.

இதையே அதிமுக மாமன்ற உறுப்பினா் அப்துல்ரகுமானும் வலியுறுத்தினாா். குடிநீா்ப் பிரச்னை குறித்த தகவல்களைத் தெரிவித்தால் அப்போதே லாரி மூலம் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் த. நாராயணன் பதிலளித்தாா்.