இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உடல் உறுப்பு தான முன்பதிவு நிகழ்ச்சியில் 25 போ் முன்பதிவு செய்துகொண்டனா்.
புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநிலச் செயலா் எஸ். பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு உடல் உறுப்பு தானத்துக்கு முன்பதிவு செய்தோருக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பாராட்டினாா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டு பதிவு விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டனா்.
நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக மாவட்டச் செயலா் என். ராமச்சந்திரன் வரவேற்றாா்.
தொடர்புடையது

நீட் தோ்வு: புதுகையில் 3,166 மாணவா்கள் எழுதுகின்றனா்

திமுக கூட்டணிதான் முதலிடம் பிடிக்கும்: எஸ். ரகுபதி

எடப்பாடி பழனிசாமி இன்று புதுகையில் வாக்குசேகரிப்பு!

நிலத்தை விற்ற பெற்றோருடன் மகன் தகராறு: மூத்த தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


