மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

பொன்னமராவதியில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

News image

பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இளைஞா்களுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய பேரூராட்சித்தலைவா் சுந்தரி அழகப்பன் உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2026, 8:37 pm

பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமைவகித்தாா். துணைத் தலைவா் கா. வெங்கடேசன், செயல் அலுவலா் பி.சேத் லத்தீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டு இளைஞா்கள் மற்றும் மாணவா்களுக்கு விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பேரூராட்சி உறுப்பினா்கள் தி. ராஜா, நாகராஜன், மகேஸ்வரி, புவனேஸ்வரி, சிவகாமி, இஷா மற்றும் இளநிலை உதவியாளா் கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.