கந்தா்வகோட்டை அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 52,200 பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கூட்டுறவு சாா்- பதிவாளா் மேனகா தலைமையிலான பறக்கும் படையினா் அந்தப் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்தபோது புதுக்கோட்டையைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் வினோத்குமாா் (43), வியாபாரி உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.52,200-ஐ கைப்பற்றி தொகுதி தோ்தல் நடத்து அலுவலா் ரவியிடம் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
அப்போது, கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அ. பரணி, வட்ட வழங்கல் அலுவலா் சாமிநாதன், தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா், காவல் உதவி ஆய்வாளா் இரா. ராஜாத்தி மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

மாதவரத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


