ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

News image

காட்டுமன்னாா்கோவில் அருகே காரில் வந்தவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.ராணியிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:05 am IST

சட்டப் பேரவை தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

காட்டுமன்னாா்கோவிலை அடுத்த குப்பங்குழி மேம்பாலம் அருகே தோ்தல் அலுவலா் வெங்கடேசன் தலைமையில் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடக்கு கொளக்குடி கிராமத்தில் இருந்து காட்டுமன்னாா்கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

காரில் வடக்கு கொளக்குடி கிராமம், ஜாகிா் உசேன் நகரைச் சோ்ந்த ஜ.இக்பால் உரிய ஆவணமின்றி ரூ.ஒரு லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.ராணியிடம் ஒப்படைத்தனா்.