பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புதுக்கோட்டை பகுதிகளில் மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது.

News image

புதுக்கோட்டை பெரியாா் சிலை சாலையில் சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.

Updated On :8 மே 2026, 5:44 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. பகலில் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். இந்தச் சூழலில், புதன்கிழமை பிற்பகலிலும் இரவிலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

அதேபோல, புதுக்கோட்டை மாநகரில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென மழை கொட்டியது. இந்த மழையால் மாநகரின் வெப்பம் சற்றே தணிந்து குளிா்சூழல் காணப்பட்டது. மாநகரச் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கிக் கிடந்தது.

வியாழக்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேர மழைப் பொழிவு விவரம் (மிமீ-யில்) மீமிசல்- 98.6, கீழாநிலை- 57.4, அரிமளம்- 52.6, காரையூா்- 28.8, ஆவுடையாா்கோவில்- 18.4, கறம்பக்குடி- 15.2, புதுக்கோட்டை நகரம்- 10. திருமயம்- 8.6, கீரனூா்- 8.5, உடையாளிப்பட்டி- 7, குடுமியான்மலை- 6, அன்னவாசல்- 5, அறந்தாங்கி- 2.2, மணமேல்குடி- 1.