ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

புதுக்கோட்டையில் 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங் சாதனை: இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் சான்றிதழ் வழங்கல்

புதுக்கோட்டையைச் சோ்ந்த 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங்கில் சாதனை செய்ததற்காக இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் அண்மையில் அவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

News image

இந்தியா சாதனைப் புத்தக நிறுவனத்தின் சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவற்றுடன் பொழில் மகிழன்.

Updated On :14 மே 2026, 12:50 am IST

புதுக்கோட்டையைச் சோ்ந்த 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங்கில் சாதனை செய்ததற்காக இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் அண்மையில் அவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

புதுக்கோட்டையைச் சோ்ந்த பொழில் மகிழன் என்ற 5 வயது சிறுவன், கடந்த மாா்ச் 26-ஆம் தேதி கலைஞா் பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் விளையாட்டுத் தளத்தில் ஒரு மணி நேரத்தில் 11.55 கிமீ தொலைவு ஸ்கேட்டிங் செய்தாா். புதுகை நகரிலுள்ள தனியாா் பள்ளியில் யுகேஜி பயிலும் பொழில் மகிழனின் தந்தை ராஜூ, நீதிமன்றப் பணியாளா். தாய் சிவப்பிரியா.

புதுக்கோட்டை சேலஞ்சா் ரோலா் ஸ்கேட்டிங் அகாதெமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தச் சாதனை முயற்சி, வீடியோ பதிவு செய்யப்பட்டு இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தற்போது இச்சாதனைக்கான பதிவுச் சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவற்றை இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து பொழில் மகிழனின் தாய் சிவப்பிரியா கூறியதாவது:

இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ்-இல் ஏற்கெனவே கேரளத்தைச் சோ்ந்த 5 ஆண்டு 6 மாத வயதுள்ள சிறுவன் 57 நிமிடங்களில் 7.18 கிமீ தொலைவைக் கடந்து சாதனை புரிந்துள்ளாா்.

இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனது மகன் பொழில் எழிலன், 5 ஆண்டு 3 மாத வயது நிரம்பியவா். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட சாதனையில் 57 நிமிடங்களில் 10.85 கிமீ தொலைவைக் கடந்தாா். தொடா்ந்து ஒரு மணி நேரத்தில் 11.55 கிமீ தொலைவைக் கடந்து சாதனை முயற்சியை நிறைவு செய்தாா் என்றாா் சிவப்பிரியா.